புதுவையில் இளநிலை எழுத்தவர் பதவியில் உள்ளவர்களுக்கு பணியில் சேர்ந்த ஆண்டை கணக்கிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். தேர்வுகள் நடத்தி பதவி உயர்வு வழங்கக்கூடாது என அமைச்சக ஊழியர்கள் பலகட்ட போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இளநிலை பதவியில் இருப்போருக்கு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுவை அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
இதையும் படியுங்கள்: RBI Grade B Jobs: ரிசர்வ் வங்கியில் 291 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
மேல்நிலை எழுத்தர் பதவியில் 92 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் தகுதியுள்ள இளநிலை எழுத்தர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு துறைசார்ந்த போட்டி தேர்வு மூலம் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. காலி பணியிட எண்ணிக்கை விபரம் 2017 முதல் 2023 வரை வெளியிடப்பட்டுள்ளது.
துறைரீதியான தேர்வில் பங்கேற்க குறைந்தது இளநிலை எழுத்தர் பணியில் சேர்ந்து 4 ஆண்டு ஆகியிருக்க வேண்டும். அதன்படி பணியிடங்கள் ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. துணை அதிகாரிகளுக்கான கணக்கு தேர்வு, அமைச்சக பணியாளர்களுக்கான பொதுத்துறை தேர்வு ஆகியவை நடக்கும்.
விண்ணப்பத்தை வரும் ஜூன் 2 தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒப்புதல் பெற்று பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் தர வேண்டும். தேர்வுகள் புதுவையில் மட்டும் நடைபெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil