புதுச்சேரியில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மார்ச் 15 அன்று நடைபெறுவதாகவும், ஆர்வமுள்ளவர்கள் கலந்துக் கொள்ளுமாறும் தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக 40 முன்னணி புதுச்சேரி மற்றும் தமிழகம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் பத்தாம் வகுப்பு (SSLC), 12 ஆம் வகுப்பு (HSC), ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ (Diploma), இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்ப்பு (UG, PG Degree), மருத்துவம் சார்ந்த படிப்புகள் (Medicinal Courses) மற்றும் பொறியியல் (Engineering) பட்டம் பெற்றவர்கள் இம்முகாமில் பங்கு பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு (Resume -10 Nos.) மற்றும் கல்வித்தகுதிக்கான உண்மை/நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு துறை இயக்குனர் லக்ஷ்மி நாராயணா ரெட்டி தெரிவித்துள்ளார்.