புதுச்சேரி ஸ்டெனோ, யூ.டி.சி தேர்வுகள் எப்போது? வதந்திகளுக்கு அரசு விளக்கம்
யூ.டி.சி., தேர்வு ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கின்றது. இதற்கான ஹால்டிக்கெட்டினை பெற்றுக்கொள்ளலாம் என, சமூக வலை தளத்தில் பரம் செய்தி உண்மையானது அல்ல – புதுச்சேரி அரசு
புதுச்சேரி ஸ்டெனோகிராபி கிரேட் 2 தேர்வு இம்மாதம் 23ஆம் தேதி புதுச்சேரி டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டியில் நடைபெறுகிறது.
Advertisment
இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள புதுச்சேரி அரசு வெப்சைட்டில் பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இணையதள முகவரி: https://dpar.py.gov.in/#gsc.tab=0
மேலும் முதுநிலை எழுத்தர் (யூ.டி.சி.) போட்டி தேர்விற்கு ஹால் டிக்கெட்டினை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என, சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருவது உண்மை இல்லை என புதுச்சேரி நிர்வாக சீர்திருத்தத் துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை 116 யூ.டி.சி.,பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. இதில் 46 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு யூ.டி.சி., பணியிடத்திற்கு 396 பேர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், 165 எல்.டி.சி.,பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 29ம் தேதி வரை, ஆன்-லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் 47 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். யூ.டி.சி., - எல்.டி.சி., பணிக்கு விண்ணப்பங்களை பெற்ற கையோடு, பொறுப்பாளர்களை நியமித்து, தேர்வு மையங்களையும் இறுதி செய்து வருகிறது.
இதற்கிடையில் யூ.டி.சி., தேர்வு ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கின்றது. இதற்கான ஹால்டிக்கெட்டினை பெற்றுக்கொள்ளலாம் என, சமூக வலை தளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது உண்மையானது அல்ல என, நிர்வாக சீர்த்திருத்த துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil