பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
தேசிய வாழ்வாதார சேவை மைய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு. அமைச்சகம் மூலம், புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் அமைத்து அதன் மூலம், படித்த வேலையற்ற எஸ்.சி. மற்றும் எஸ்.டி., சமூக மாணவர்களுக்கு சிறப்பு தொழில் வழிகாட்டுதல், தன்னம்பிக்கை ஏற்படுத்துதல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.தற்போது, அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஓராண்டு கால போட்டித் தேர்வு பயிற்சி, கணினிப்பயிற்சி மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிகள் திறன் வாய்ந்த தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்பு வரும் 1ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் உதவிதொகை ரூ. ஆயிரம் வழங்கப்படும், மேலும், போட்டித்தேர்வு பயிற்சிக்கான எழுது பொருட்கள் வழங்கப்படும்.பயிற்சியில் சேர விருப்பமுள்ள பிளஸ் 2 முடித்த, 27 வயதிற்கு உட்பட்ட புதுச்சேரியை சேர்ந்தவர்கள், வரும் 31ம் தேதிக்குள் தங்கள் சுய விபரங்களுடன் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், இரண்டாம் தளம், கனரா வங்கி, ரெட்டியார்பாளையம், என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil