தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 6 ஆம் தேதி புதுச்சேரி தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை இயக்குனர் மாணிக்தீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் மூலம், வரும் 6 ஆம் தேதி வேலைவாயப்பு முகாம், தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடக்கிறது.
காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் முகாமில் மேனடக், சுந்தரம் பாஸ்ட்நர்ஸ், மலபார் குரூப்ஸ், ஸ்டெரல் ஜென், ஹைடிசைன், இந்துஸ்தான் லீவர் ஆகிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
எனவே, இன்ஜினியரிங், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஐ.டி.ஐ (எலக்ட்ரிஷியன், வெல்டர், பிட்டர்) மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் இம்முகாமில் பங்கு பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுயவிபர குறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“