புதுச்சேரி மாநிலத்தில் நில அளவைத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான தேர்வறை அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
புதுவை மாநில நில அளவைத் துறையில் காலியாக உள்ள சர்வேயர், கட்டட வரைபடவியலாளர், சுற்றுலாத் துறையில் உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் வரும் டிசம்பா் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று காலையில் சர்வேயா், கட்டட வரைபடவியலாளர் தேர்வுகளும், மதியம் சுற்றுலா உதவியாளர் தேர்வும் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தேர்வறை அனுமதி நுழைவுச்சீட்டு புதுவை அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு புதுச்சேரி தலைமைச் செயலகத் தேர்வுப் பிரிவு செயலர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“