முதுநிலை, இளநிலை மருத்துவ மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பயிற்சிகால உதவித் தொகையை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.பி.பி.எஸ்., பயிலும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக மருத்துவமனையில் பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப்பின் செய்கின்றனர். இதற்காக, தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறையின்படி அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
ஆனால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகள் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகையை சரிவர வழங்கவில்லை. அதே நேரத்தில் பயிற்சி மாணவர்களிடம் கடுமையான வேலையை மட்டும் வாங்கி கொள்கின்றன. இதேபோல் பயிற்சிகால உதவித் தொகையும் சீராக வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கல்லுாரியும் ஒவ்வொரு மாதிரியாக பயிற்சி உதவி தொகையை அளித்து வந்தன.
புதுச்சேரியில் அரசாணை ஏதும் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இது தொடர்பாக தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் சென்ற நிலையில் சுகாதார துறை அதிரடியாக மருத்துவ மாணவர்களின் பயிற்சி கால உதவி தொகையை உயர்த்தி ஒரே மாதிரியாக வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“