புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.,யில் ‘ஸ்பாட் அட்மிஷன்' இன்று முதல் 28 ஆம் தேதி வரை நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. முதல்வர் அழகானந்தம் விடுத்துள்ள செய்திகுறிப்பில், மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான 'ஸ்பாட் அட்மிஷன்' இன்று முதல் 28 ம் தேதி வரை நடக்கிறது.
இதையும் படியுங்கள்: NEET Counselling 2023; புதுச்சேரி சென்டாக் கவுன்சிலிங்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இங்கு, பிட்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், கம்ப்யூட்டர் இயக்குநர், ஒயர்மேன், வெல்டர், மின்சார வாகன மெக்கானிக் ஆகிய பயிற்சி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
பயிற்சியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் நேரடியாக ஐ.டி.ஐ.,முதல்வரை அணுகலாம்.
மாணவர்களுக்கு பயிற்சி கால சலுகைகள் உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 உதவித் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். சீருடை, ஷூ, புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். மேலும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற்று தர ஏற்பாடு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil