புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 13 ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு, தற்போது பணி செய்யும் பல்நோக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும். இதற்கு, வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.