புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மீண்டும் அங்கீகாரம்
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு வெள்ளிக்கிழமை தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
Advertisment
புதுச்சேரி கதிர்கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் நிலவி வந்த நிலையில், இன்று (ஜூன் 23) மாலை இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 180 இடங்கள் உள்ளன. இதில் புதுவை மாணவர்களுக்கு 130 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 27 இடங்களும், என்.ஆர்.ஐ ஒதுக்கிட்டு 22 இடங்களும் ஒதுக்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு நிர்வாகம் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், இந்த மருத்துவக் கல்லூரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதை தேசிய மருத்துவ ஆணையத்திடம் இணைக்காதது, மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு வசதியை ஏற்படுத்தாதது உள்ளிட்ட குறைகளை சுட்டிக்காட்டி இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் தற்காலிகமாக ரத்து செய்தது.
Advertisment
Advertisements
இது புதுவை அரசுக்கு ஒரு சிக்கலாக இருந்தது. இந்த நிலையில் முதல்வர், கவர்னர் ஆகியோர் சீரிய நடவடிக்கை எடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆணைய அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் மீண்டும் ஆய்வு செய்து விட்டு சென்றனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
இதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நிச்சயம் நடக்கும் என முதல்வர் மற்றும் கவர்னர் தெரிவித்தனர். மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் 26 ஆம் தேதி மூன்று மணிக்குள் மணிக்குள் தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அங்கீகாரம் கிடைக்க வேண்டும், இல்லையென்றால் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதனால் பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில், இன்று மாலை தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரத்தை வழங்கி ஐந்து ஆண்டுகள் அங்கீகாரத்தை நீடிப்புதாக உறுதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்படும் என தெரிய வருகிறது. இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil