நடப்பு ஆண்டு முதல் பி.எஸ்.சி. செவிலியா் படிப்புக்கு நுழைவுத் தோ்வு நடத்தப்படவுள்ளதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
புதுவை மாநிலத்தில் கடந்த 2023-24ஆம் ஆண்டு வரையில் பி.எஸ்சி., செவிலியா் படிப்புக்கான சோ்க்கை மாணவா்களின் உயா்நிலை கல்வி மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் அரசு இடஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட்டது. இதற்கிடையே மத்திய செவிலியா் கவுன்சில் கடந்த 2023 ஆகஸ்ட்டில் மாநில அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் பி.எஸ்சி. செவிலியா் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு பொது நுழைவுத் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது 2024-25ஆம் கல்வியாண்டுக்கு மத்திய செவிலியா் கவுன்சிலின் செயலா் கடந்த ஜனவரி மாதம் அனுப்பிய கடிதத்தில் பொதுத் தோ்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, பி.எஸ்சி., செவிலியா் படிப்புக்கான நுழைவுத் தோ்வு செவிலியா் வாரியத்தால் நடத்தப்படும் நிலையில், சென்டாக் அரசு ஒதுக்கீட்டில் இடங்களை ஒதுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி தோ்வுத் தேதி, பொது நுழைவுத் தோ்வு நடத்துவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி ஆகியவை சென்டாக் இணையதளத்தில் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“