புதுச்சேரி அரசு துறையில் பணிபுரிய யூ.டி.சி பதவிக்கான நுழைவுத் தேர்வு இன்று நடத்தப்பட்டது .136 பணியிடங்களுக்கு 46,000 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் யூ.டி.சி.,பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று (ஜூலை 23) காலை 10 மணிக்கு துவங்கியது. இதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொண்டனர்.
இத்தேர்வு புதுச்சேரி -107; காரைக்கால்-13; ஏனாம்-8; மாகி-5 என மொத்தம் 133 மையங்களில் நடத்த அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் காலை எட்டு முப்பது மணி முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்பு பல்வேறு காரணங்களால் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பின்பு தேர்வு இன்று நடக்கிறது.
136 பணிகளுக்கு 46 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 700க்கும் மேற்பட்ட ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்யப்படாததால் மாணவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil