தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி படிப்பு மட்டுமின்றி தொழில் சார்ந்த படிப்புகளையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஸ்ரீ ஜோஸ் மேத்யூ, புதுச்சேரியில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திறம்பட செயல்படுத்துவதன் மூலம் கல்வியின் அடிமட்ட நிலையை மறு வரையறை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்கள்.
இதையும் படியுங்கள்: நாட்டிலேயே முதல் முறை; பள்ளி மாணவர்களுக்கு ‘மணற்கேணி’ செயலி: சிறப்பம்சம் என்ன?
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புதிய பார்வையை இந்த தேசிய கல்விக் கொள்கை உருவாக்கி உள்ளது. இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 49 பள்ளிகளில் கேந்திர வித்யாலயா பள்ளி நம்பர் ஒன்னாக இருப்பது பெருமைக்குரியது.
தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களுக்கு தொழிற்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறது.
இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தச்சு, மண்பாண்டங்கள், முகமூடி தயாரித்தல் தையல் எம்ப்ராய்டரி, அழகு கலை போன்ற சில தேவையான படிப்புகளை கற்றுக் கொடுத்து தொழில் சார்ந்த பாடமாகவும் நடத்தி வருகிறோம்.
இந்தப் பேட்டியின் போது நவோதயா பள்ளியின் முதல்வர் கண்ணதாசன் ஆதித்யா வித்யாசரம பள்ளி முதல்வர் நடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil