/indian-express-tamil/media/media_files/zFfSX8f5FAtqvn16f8kO.jpg)
புதுச்சேரியில் 16 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் 3 தேர்வு மையங்களிலும், மாஹேயில் 1 தேர்வு மையத்திலும், ஏனாமிவ் 2 மையங்களிலும் நடக்கிறது.
Puducherry Land survey Exam date : பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் தல உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கு எழுத்து தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு-சார்பு செயலர் (தேர்வு பிரிவு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்திக் குறிப்பில், “புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும் 08.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்தத் தேர்வு, புதுச்சேரியில் 16 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் 3 தேர்வு மையங்களிலும், மாஹேயில் 1 தேர்வு மையத்திலும், ஏனாமிவ் 2 மையங்களிலும் நடக்கிறது.
இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக ஏதேனும் விவரம் (அ) உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.