புதுச்சேரியில் 247 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலி; 3-ம் சுற்றுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கை: 247 எம்.பி.பி.எஸ் இடங்கள் உட்பட 374 மருத்துவ இடங்கள் காலி; 3 ஆம் சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 11 கடைசி தேதி!

புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கை: 247 எம்.பி.பி.எஸ் இடங்கள் உட்பட 374 மருத்துவ இடங்கள் காலி; 3 ஆம் சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 11 கடைசி தேதி!

author-image
WebDesk
New Update
Puducherry Mop Up Round NEET UG Counselling 2025 CENTAC Tamil News

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 247 காலி இடங்கள் உள்ளதாகவும், இதற்கான 3-வது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 11 ஆம் தேதி கடைசி நாள் என்றும் சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

'நீட்' நுழைவுத்தேர்வு சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சென்டாக் நிர்வாகம் நடத்தி வருகிறது. இந்தநிலையில் மருத்துவ படிப்புகளுக்கான 2-வது சுற்று மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 10 இடங்கள், கிறிஸ்துவ சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் 56 இடங்கள், தெலுங்கு சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் 114 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 7 இடங்கள், என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் 60 இடங்கள் என மொத்தம் 247 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் பல் மருத்துவத்தில் 96 இடங்கள், ஆயுர்வேத படிப்பில் 28 இடங்கள் மற்றும் கால்நடை மருத்துவத்தில் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 3 இடங்களும் உள்ளன.

3-வது சுற்று கலந்தாய்வு

இந்த நிலையில் சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisment
Advertisements

நீட் சார்ந்த இளநிலை படிப்புக்கான 2-வது சுற்று மாணவர் சேர்க்கை பட்டியல் மற்றும் காலியிடங்கள் விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. முதல் சுற்று மற்றும் 2-வது சுற்றில் சீட் ஒதுக்கப்பட்டவர்கள், 3-வது சுற்றில் எந்த வரம்பும் இல்லாமல் பங்கேற்கலாம்.

கலந்தாய்வுக்கு எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் படிப்பில் உள்ள அரசு, நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் வருகிற 11 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்டாக் இணையதளம் மூலம் பதிவு கட்டணம் செலுத்தி பாட விருப்பங்களை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

3-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவு கட்டணமாக கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த வேண்டும்.  பின்னர், பாட விருப்பங்களை சமர்ப்பிக்க் வேண்டும். அந்தந்த கல்லூரிகளுக்கான கல்வி கட்டணம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அமன் சர்மா கூறியுள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Mbbs Counselling Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: