புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளியில் 9 ஆவது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜவகர் நவோதயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி, பெரியகாலாப்பட்டில் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் (அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகள்) உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தெரிவுநிலைத் தேர்வில் அடிப்படையில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்.31 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களின் பெற்றோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“