பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, கோரிமேடு காவலர் மைதானத்தில் ஊர்காவல்படை வீரர் பணிக்கு உடற்தகுதி தேர்வு நடைப்பெறும் என புதுச்சேரி காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி காவல்துறையில் ஊர்காவல்படை வீரர்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதில், 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள் பிரிவில் 15,697 பேரும், பெண்கள் பிரிவில் 4492 பேர் என மொத்தம் 20,189 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறை தலைமைய சீனியர் எஸ்.பி. அனிதா ராய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி காவல்துறையில் ஊர்காவல்படைக்கு பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலித்து இறுதி செய்யப்பட்டு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. உடற்தகுதிக்கான கடிதம் அனுமதி கடிதத்தை இணையதளத்தில் நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை, கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. ஊர்காவல்படை வீரர் தேர்வு குறைதீர்வு கமிட்டியும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“