Advertisment

புதுச்சேரியில் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்; ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

புதுச்சேரியில் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப கல்வித்துறை அறிவிப்பு; தகுதி, விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்கள் இங்கே

author-image
WebDesk
New Update
today

புதுச்சேரியில் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப கல்வித்துறை அறிவிப்பு; தகுதி, விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்கள் இங்கே

புதுச்சேரியில் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரிய தர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;  புதுவை பள்ளி கல்வித் துறை, 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை நடத்துவதற்கு அல்லது மண்டல நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் 1.7.2023 தேதியின்படி 65 வயதை கடந்திருக்கக் கூடாது. சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நியமனத்தின்போது, ​​அவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 22 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். அவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.

நேர்காணல் நடைபெறும் தேதி முறையே மண்டல அலுவலகங்கள் மூலம் தெரிவிக்கப்படும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அசல் சான்றிதழ்களுடன், ஓய்வூதிய ஆணை, வயது மற்றும் தகுதிச் சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட நகல்களை கொண்டு வர வேண்டும்.

நேர்காணலில் கலந்துக் கொள்ள பயணப்படி இல்லை. காரணங்கள் எதுவும் கூறாமல் தேர்வு செயல்முறையை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய கல்வித்துறைக்கு உரிமை உள்ளது.

புதுவையில் வாழ்க்கை அறிவியல் - 16, உடல் அறிவியல் - 23, சமூக அறிவியல் - 41 என 80 ஆசிரியர்கள், காரைக்காலில் கணிதம் - 10, வாழ்க்கை அறிவியல் - 13, உடல் அறிவியல் - 14. சமூக அறிவியல் - 24, பிரெஞ்சு - 1 என 62 ஆசிரியர்கள், மாகியில் கணிதம் - 4, வாழ்க்கை அறிவியல் - 2, சமூக அறிவியல் - 5, பிரெஞ்சு - 1 என 12 ஆசிரியர்கள் என மொத்தம் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புதுவையில் பள்ளி கல்வி இயக்குநரகம், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர் புதுச்சேரி - 60.5005 என்ற முகவரியிலும், காரைக்காலில் துணை இயக்குனர் (மேல்நிலை கல்வி). தலத்தெரு, காரைக்கால் என்ற முகவரியிலும், மாகியில் மண்டல அலுவலர் அலுவலகத்திலும் நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 77 ஆசிரியர்கள் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், தற்போது 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப மீண்டும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பி.எட் முடித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Teachers Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment