scorecardresearch

புதுச்சேரியில் மார்ச் 13 முதல் பொதுத் தேர்வுகள் ஆரம்பம்; ஏற்பாடுகள் தீவிரம்

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது – புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனர் அறிவிப்பு

புதுச்சேரியில் மார்ச் 13 முதல் பொதுத் தேர்வுகள் ஆரம்பம்; ஏற்பாடுகள் தீவிரம்

புதுவை மாநிலத்தில் 13 ஆம் தேதி தொடங்கும் 10,11,12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வுகளை 44 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? நீங்கள் தவிர்க்க முக்கிய விஷயங்கள் இங்கே

இதுதொடர்பாக, புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை புதுவை, காரைக்காலில் நடத்தப்படுகிறது. இதற்காக புதுச்சேரி பகுதியில் 33 மேல்நிலை தேர்வு மையங்களும், 38 இடைநிலை தேர்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 10 மேல்நிலை தேர்வு மையங்களும், 13 இடைநிலை தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்கான மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை 44,013 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு வினாத்தாள், விடைத்தாள் கொண்டு செல்ல தேர்வு மையத்துக்கு பாதுகாப்புக்கு ஆயுதம் ஏந்திய போலீசார், தேர்வின்போது தடையின்றி மின்சார சேவை ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Puducherry school public exams begins march 13

Best of Express