புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சராசரியாக 100 பாரன்ஹீட்க்கு மேலாக வெப்பம் பதிவானது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக இருந்து வருவதால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறையயை நீட்டிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். புதுச்சேரியில் ஜுன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலின் தாக்கத்தை கருதி புதுச்சேரியில் புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளும் ஜுன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்புக்கு ஜுன் 12-ம் தேதியும், 1-5 வகுப்புக்கு ஜுன் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜுன் 5) அறிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“