தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கிராமப்புறத்தில் உள்ள 8 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. ஆனால் நகரப் பகுதியில் ஒரு அரசு பள்ளி கூட 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை.
இந்நிலையில் பிள்ளை சாவடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் அனந்தரங்கம் பிள்ளை அரசு சிறப்பு பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்துள்ளது.
இந்த சிறப்பு பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சண்முகப்பிரியா 442, லிங்கேஸ்வரி 383, லோகேஸ்வரி 380 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் கண் பார்வையற்றவர்கள்.
இதே பள்ளியில் படித்த மாணவர்கள் சந்தோஷ், அண்டராஜு நரசிம்மன், தவ்லத்நிஷா ஆகியோர் காதுகேளாதோர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“