/indian-express-tamil/media/media_files/2024/10/18/PwFbRatGGZkY1vf2EkOr.jpg)
புதுச்சேரியில் அரசுப் பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறை, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் போன்ற விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 'சி' மற்றும் 'பி' (அரசிதழில் இல்லாத) பணியிடங்களுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நேரடி போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. இதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டத்தை சம்பந்தப்பட்ட துறைகளே தீர்மானித்து வந்தது. ஆனால் குறுகியகால இடைவெளிகளில் ஒரே மாதிரியான அடிப்படை தகுதிகளை கொண்ட தேர்வுகள் நடத்தப்படுவதால், விண்ணப்பதாரர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலும், அரசுக்கு பொருளாதார இழப்பும் ஏற்ப டுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, அரசு துறைகளில் உள்ள குரூப் 'சி' மற்றும் குரூப் 'பி' (அரசிதழில் வெளியிடப்படாத) பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, ஒரு தேர்வு முகமை அமைப்பதும் பல்வேறு நிலைகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வை நடத்துவதும் அவ சியம் என்பது குறித்து அரசு பரிசிலித்து வந்தது. அதன்படி புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் பி' பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடத்துவதற்காக புதுச்சேரி பணியாளர் தேர்வு முகமை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதில் தலைவராக தலைமை செயலாளர், உறுப்பினர்களாக நிதித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர்கள் இருப்பார்கள். அரசு பரிந்துரைக்கும் செயலாளர் அளவிலான அதிகாரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை சார்பு செயலாளர் உறுப்பினராகவும் இருப்பார்கள். புதுச்சேரி அரசின் துறைகள் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை தேர்வு முகமையிடம் தெரிவிக்க வேண்டும்.
அதன்படி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். தேர்வு ஆணையம் சி.பி.எஸ்.இ. தரத்திலான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு வரையிலான அடிப்படை தகுதி கொண்ட பணியிடங்களுக்கு நேரடி தேர்வை நடத்தும். எஸ்.எஸ்.எல்.சி. தகுதி அடிப்படையிலான பணியிடங்களுக்கு 100 வினாக்கள் கொண்ட ஒரே தேர்வு நடத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 அல்லது டிப்ளமோ வரையிலான தேர்வுகளுக்கு முதல் தாள், 2-ம் தாள் கொண்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. துறைகளின் தேர்வு விதிமுறையை பொறுத்து திறனறிவு தேர்வு, உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அனைத்து தேர்விற்கும் முதல் தாள் கட்டாயமாகும். தொழில்நுட்பம் தொடர்பான தேர்வின் 2-ம் தாள் பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதலுக்கு பின் இறுதி செய்யப்படும்.
தகுதி மதிப்பெண்
போட்டித்தேர்வில் பொது பிரிவினர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் (முதல் மற்றும் 2-ம் தாள்) 30 மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், மீனவர்கள், முஸ்லிம் பிரிவினர் 25 மதிப்பெண் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி, ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் 20 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். இந்த பணியாளர் தேர்வு முகமை உடனடியாக செயல் பாட்டிற்கு வருகிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப புதுவை அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. இத்தகவலை புதுச்சேரி சார்பு செயலாளர் ஜெய்சகா பிறப்பித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.