புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தேர்வு பிரிவு சார்பு செயலர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தில் கள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 22-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது.
அதேபோல் புதுச்சேரி போக்குவரத்து துறையில் அமலாக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு மதியம் 2.30 மணி முதல் 4.30 வரை புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்களுக்கான அனுமதி சீட்டினை தேர்வர்கள் அரசு இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“