புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான முதலாமாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வுகள் வரும் 14 ஆம் தேதி தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லுாரி உள்பட நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு பயிலும் 830 முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு நேற்றுமுதல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான ஹால் டிக்கெட் 2 ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனிடையே இந்த தேர்வு நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த திடீர் ரத்து மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்வாக காரணம் என பல்கலைக்கழகம் கூறினாலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முதலாமாண்டு தேர்வுகள் வரும் 14 ஆம் தேதி தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“