புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 49 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பல் மருத்துவ இருக்கை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : டிப்ளமோ நர்சிங் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,480
கணினி இயக்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,430
கணினி தரவு நுழைவு ஆபரேட்டர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,430
துப்புரவு மற்றும் தூய்மைப் பணி
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,480
உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 18
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,480
பாதுகாப்பு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,430
துறைச் செயலாளர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியல் மற்றும் புள்ளியியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,430
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/02/2024020624.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.
முகவரி : நியமனக் குழு, அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை – 622004.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.02.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/02/2024020624.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.