புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் குளிர்பதன கம்மியர் மற்றும் ஆய்வக நுட்புநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சென்னையில் சூப்பர் அரசு வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
குளிர்பதன கம்மியர் (Refrigeration Mechanic)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Refrigeration Mechanic & Air Conditioning பிரிவில் ITI படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
ஆய்வக நுட்புநர் (Lab Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் DMLT படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/04/2023040112.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/04/2023040392.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil