சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்பு; JEE மதிப்பெண் தேவையில்லை

IIT-Madras invites applications for online data science programme, JEE scores not needed: சென்னை ஐஐடி வழங்கும் ஆன்லைன் டேட்டா சயின்ஸ் படிப்பு; ஜேஇஇ மதிப்பெண் தேவையில்லை

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சென்னையில், ஆன்லைன் டேட்டா சயின்ஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த படிப்பு 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த படிப்புக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். மேலும், புவியியல் இருப்பிடம், கல்வி பின்னணி மற்றும் தொழில் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், 10 ஆம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தைப் படித்த எவரையும் ஒரு தரவு விஞ்ஞானியாக ஆக்குவதை இந்த படிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த தகுதிப் பிரிவுக்கான வகுப்புகள் செப்டம்பர் 2021 இல் தொடங்கும்.

இந்த திட்டம், கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) மூலம் தேர்ச்சி பெறாமல் ஐஐடி சென்னையில் படிக்க வாய்ப்பளிக்கிறது. மாணவர்கள் தங்கள் கல்லூரி படிப்புகளுடன் நிரலாக்க மற்றும் தரவு அறிவியலில் (programming and data science) டிப்ளமோ படிப்பையும் தொடரலாம். இந்த தரவு அறிவியல் படிப்பின் அடுத்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 30, 2021. ஆர்வமுள்ள மாணவர்கள் onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஐஐடி சென்னை டேட்டா சயின்ஸ் புரோகிராம் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், “ஐஐடி சென்னையிலிருந்து இந்த டிப்ளமோ மூலம் ஒருவர் ப்ரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸில் ஒரு தொழிலை உருவாக்க முடியும். முதல் தொகுதி மாணவர்கள் ஆகஸ்ட் 2021 இல் அடித்தளத்தை நிறைவு செய்கின்றனர் மற்றும் அவர்களுக்கான பட்டமளிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

ஐஐடி சென்னை நிரலாக்க மற்றும் தரவு அறிவியலில் டிப்ளோமாவை வழங்குகிறது, இது ஒரு தனித்துவமான கற்றல் மாதிரியுடன் ஆன்லைன் பாடநெறியை நேரில் மதிப்பீடு செய்து உலகிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி சென்னை பாடத்திட்டக் கட்டணத்தில் 75 சதவிகிதம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்ப செயல்முறையின் ஒரு பகுதியாக, அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரு தகுதி செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் ஐஐடி சென்னை வீடியோ விரிவுரைகள், பணிகள் மற்றும் பாட பயிற்றுனர்களுடன் நேரடி தொடர்புகள் மூலம் நான்கு வார ஆன்லைன் பயிற்சியை வழங்குகிறது. ஆன்லைன் பணிகளை முடித்தவுடன், மாணவர்கள் தகுதித் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அடித்தள நிலைக்கு சேர்க்கை வழங்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pursue online data science programme at iit madras without jee scores know how

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com