புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள் முன்னேற்றத்திற்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அமையார் உயக்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட்டது.
ராமாமிர்தம் அமையார் உயக்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகள் ரூ.1,000 உதவித்தொகைப் பெற புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 1-ந் தேதி தொடங்கும் விண்ணப்ப பதிவு 11-ந் தேதி முடிவடைகிறது. மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"