குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் எனும் தனியார் நிறுவனம் ஆண்டுதோறும் கியூஎஸ் உலக பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை வெளியான, சமீபத்திய தரவரிசை பட்டியலில், இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அங்கீகாரம் பெற்ற 10 உயர்க்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியாவின் பெருவாரியான கல்வி நிறுவனங்கள் பின்னடவை சந்தித்துள்ளன.
டெல்லி ஐ.ஐ.டி, சென்னை ஐ.ஐ.டி, ஐ.ஐ.டி-கரக்பூர், ஐ.ஐ.எஸ்.சி-பெங்களூர், டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், மணிப்பால் உயர் கல்வி அகாடமி,பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிட்ஸ்-பிலானி, அண்ணா பல்கலைக்கழகம் (சிறப்பு அந்தஸ்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது) , வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (பரிந்துரைக்கப்பட்டுள்ளது) போன்ற சிறப்பு அந்தஸ்து உயர்க்கல்வி நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களில், கியூஎஸ் தரவரிசைப் பட்டியலில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு முதல் 1,000 இடங்களில் இந்தியாவின் 21 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 25-க இருந்துது. இந்தியாவைச் சேர்ந்த உயர்க்கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி- மும்பை தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. ஐ.ஐ.எஸ்.சி-பெங்களூர், டெல்லி ஐ.ஐ.டி, சென்னை ஐ.ஐ.டி, ஐ.ஐ.டி-கரக்பூர், ஐ.ஐ.டி-கான்பூர், ஐ.ஐ.டி-ரூர்க்கி, ஐ.ஐ.டி-குவஹாத்தி, டெல்லி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி-ஹைதராபாத் ஆகிய உயர்க்கல்வி நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
இந்த 21 கல்வி நிறுவனங்களில், கிட்டத்தட்ட 14 கல்வி நிறுவனங்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் சற்று கீழ் இறங்கியுள்ளன. ஐ.ஐ.டி-குவஹாத்தி, ஐ.ஐ.டி ஹைதராபாத், ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம், சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம் ஆகிய நான்கு உயர்க்கல்வி நிறுவனங்கள் மட்டும் தரவரிசைப் பட்டியலில் தங்கள் நிலையை சற்று அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1000 ( 800- 1000 )இடங்களுக்குள் வந்த பிட்ஸ்- பிலானி, வி.ஐ.டிபோன்ற நான்கு உயர்க்கல்வி நிறுவனங்கள் இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் கால்பதிக்க முடியாமல் பின்வாங்கின.
மற்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அங்கீகாரம் பெற்ற உயர்க்கல்வி நிறுவனங்கள் அதிக சுயாட்சியோடு செயல்படும் தன்மை கொண்டது. கூடுதலாக, இந்த திட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 10 அரசு அரசு உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டிற்கு ரூ.1,000 கோடி பெற முடியும்.
இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில், எமினென்ஸ் அங்கீகாரம் பெற்ற உயர்க்கல்வி நிறுவனங்கள சரிவை சந்துள்ளது. கியூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் மற்றும் சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தான் , பொதுவாக உயர்க்கல்வி நிறுவனத்திற்கு இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. எனவே, தற்போதைய தரவரிசைப் பட்டியல் முக்கியத்துவம் பெறுகிறது.
சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகம் சோபிக்காததால், அதற்கு வழங்கப்படுவதாய் இருந்த சிறப்பு மேலும் தாமதமாகுமா? என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை, தமிழக அரசு உடனே வழங்க தவறினால் சிறப்பு அந்தஸ்து முடிவு ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமினன்ஸ் அங்கீகாரம் குறித்த முதல்கட்ட பட்டியல் 2018-ல் வெளியிடப்பட்டாலும், 2018-19, 2019-20 கல்வி ஆண்டிற்கு ஒதுக்குவதாய் அறிவித்த நிதியில், கால்பங்கை கூட மத்திய அரசு வெளியிடாததால் பொது உயர்க்கல்வி நிறுவங்களின் செயல்திறனில் முன்னேற்றம் காணமுடியாமல் உள்ளது.
டெல்லி- ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி ஆகிய நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு தொடர்பாக தங்களது கவலைகள் தெரிவித்து வருகின்றன என்பதை கடந்த ஆண்டு நவம்பர் 21 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. கடந்த வாரம், அனைத்து எமினன்ஸ் கல்வி நிறுவனங்களோடு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய கூட்டத்தில், இது குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டது.
மும்பை, டெல்லி, கான்பூர், குவஹாத்தி, மெட்ராஸ், ரூர்க்கி, கரக்பூர் ஆகிய ஏழு ஐ.ஐ.டி உயர்க்கல்வி நிறுவனங்களும், வெளிப்படைத் தன்மையில்லாததால் இந்த ஆண்டு டைம்ஸ் உயர்கல்வி உலக தரவரிசையில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஏப்ரல் மாதம் கூட்டாக அறிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.