இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Manager (Technical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: Diploma in Electronics படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 21 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 9 லட்சம்
Deputy Manager (Technical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: B.E./ B.Tech./ B.Sc. (Engg) in Electronics & Telecom; or Telecom; or Computer Science; or Computer & Communication; or Information Technology; or Electrical; or Electronics படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 12 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/92345/Index.html என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1200. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 600
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“