RRB Apprentice Recruitment 2019: கோரப்பூரின் வடகிழக்கு ரயில்வே, 1,104 தொழில்பழகுநர் பயிற்சி (apprentice)இடங்களுக்கான விண்ணபத்தை வரவேற்கின்றது.
Advertisment
ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் indianrailways.gov.in, ner.indianrailways.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.
இந்த பணிக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த நவம்பர் 26ம் முதல் தொடங்கி, டிசம்பர் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Advertisment
Advertisements
கல்வி: வேட்பாளர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்று ஐடிஐ சான்றிதழ் *( குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள்) பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறைந்தது 15 வயது, அதிகபட்ச வயது வரம்பு 24 வயது. எஸ்சி, எஸ்டி பிரிவு தேர்வர்களுக்கு ஐந்து ஆண்டும், ஒபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டும், PwD பிரிவினருக்கு பத்து ஆண்டும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு கொடுப்படுகிறது.
வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்! - ietamil வீடியோ
கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ .100 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்.டி, EWS, PwD மற்றும் பெண் தேர்வர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
1,104 தொழில்பழகுநர் பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு ner.indianrailways.gov.in செல்லவும்
ஸ்டேப் 2: முகப்புப்பக்கத்தில் தெரியும் ‘Act Apprentice 2019-20 ’ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்
ஸ்டேப் 3: அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்யவேண்டும்
ஸ்டேப் 4: அடிப்படை தகவல்களைப் பயன்படுத்தி முதலில் பதிவு (Registration) செய்யவேண்டும்
ஸ்டேப் 5: பதிவு எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவேண்டும்
ஸ்டேப் 6: படிவத்தை நிரப்பவும், படங்களை பதிவேற்றவும்