இந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்.ஆர்.சி) தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் 3,553 அப்ரென்டிஸ்ஷிப் (தொழில் பழகுநர்) பணிக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப இணைப்பு நாளை காலை 11 மணி முதல் பிப்ரவரி 6ம் தேதி மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ போன்றவைகளின் மூலம் சராசரி ) மெரிட் லிஸ்ட் உருவாக்கப்படுகிறது. இந்த மெரிட் லிஸ்டில் தயாரிப்பில் 10/ஐடிஐ என இரண்டிற்கும் சமமான வெயிட்டேஜ் கொடுக்கப்படும். இந்த பட்டியலின் அடிப்படையில் மூலம் தேர்வர்கள் அப்ரென்டிஸ்ஷிப் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2020 ஏப்ரல் 1 முதல் ஒரு வருடம் பயிற்சி பெறுவார்கள்.
தகுதி
வயது: விண்ணப்பதாரர் குறைந்தது 15 வயதுடையவராக இருக்க வேண்டும். உயர் வயது வரம்பு 24 வயதாகும். பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு , உயர் வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.
கல்வி: விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 (அ) 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். என்சிவிடி (அ) எஸ்சிவிடி இணைக்கப்பட்ட ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : இந்த ஒரு வருடத்திற்கு, தகுந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் . ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி (சி.சி.ஏ.ஏ) மற்றும்
தேசிய பயிற்சி சான்றிதழ் (என்ஏசி) வைத்திருப்பவர்களுக்கு காலியிடங்களில் 20% முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூ .18,000 - ரூ .56,900 வரம்பில் சம்பளம் கிடைக்கும்.
கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் ரூ .100 ஆகும். எஸ்சி, எஸ்டி, பி.டபிள்யூ.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.