Advertisment

Indian Railway Recruitment 2019: ரயில்வேயில் 13,487 பேருக்கு வேலை... தகுதி விபரங்கள் இங்கே!

Indian Railway Announced 13487 Vacancy: விவரங்களுக்கு http://www.rrbcdg.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Railways job

Railways job

ரயில்வே துறையில் 13,487 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஜனவரி 1 முதல் தொடங்கி விட்டன. இதுக் குறித்து முழு அறிவிப்பை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Advertisment

64 ஆயிரம் லோகோ பைலட், 62 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள், கேங்க்மேன் ஆகியோருக்கான இடங்களை நிரப்பும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதற்கான முதல்கட்ட தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இளநிலை பொறியாளர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

மார்ச் மாதம் தேர்வு நடைபெறலாம் எனத் தெரிகிறது. ஜனவரி 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

Indian Railway Released Vacancy for JE, DMS and CMA Posts:

பொறியியல் படிப்பில் டிப்ளமோ மற்றும் பி.இ. பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை பொறியாளர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் ரயில் பெட்டிகள் பராமரிப்பு, மின்னணு சேவை, மின்னணு பொருட்களை கையாளுதல் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்படுவர்.

இந்த ஆண்டு முதல் அனைத்து விண்ணப்பங்களும் ஆன்-லைன் மூலம் நிரப்பி அனுப்ப வேண்டும், ஆன்-லைன் மூலம் தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும், அதில் ரூ.400 தேர்வு எழுதிய பின் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி. எஸ்டி பிரிவு மாணவர்கள் , மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும். அவர்கள் தேர்வு எழுதியபின் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு http://www.rrbcdg.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment