ராஜ்யசபா செயலகத்தில் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் இதர பணிகள் என மொத்தம் 110 இடங்களுக்கு பணியாளர்களை சேர்ப்பதற்கான பிராசஸ் தொடங்கியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ தளமான rajyasabha.nic.in மூலம் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மே 2 2022க்கு முன்பு விண்ணப்பங்கள் அப்ளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
காலியாக இருக்கும் பணியிட விவரங்கள்
- உதவி ஆராய்ச்சி/குறிப்பு அதிகாரி(லெவல் 8 பே மெட்ரிக்ஸ்): காலி இடங்கள் - 3
- மொழிபெயர்ப்பாளர் (லெவல் 8 பே மெட்ரிக்ஸ்) :காலி இடங்கள் - 15
- அலுவலகப் பணி உதவியாளர் (லெவல் 4 பே மெட்ரிக்ஸ்) : காலி இடங்கள் - 12
- லெஜிஸ்லேட்டிவ்/ கமிட்டி/ எக்ஸிகியூட்டிவ்/ புரோட்டோகால் அதிகாரி (லெவல் 10 பே மெட்ரிக்ஸ்) :காலி இடங்கள் - 12
- அசிஸ்டெண்ட் லெஜிஸ்லேட்டிவ்/ கமிட்டி/ எக்ஸிகியூட்டிவ்/ புரோட்டோகால் அதிகாரி(லெவல் 8 பே மெட்ரிக்ஸ்) : காலி இடங்கள் - 26
- செயலக உதவியாளர் (லெவல் 6 பே மெட்ரிக்ஸ்) : காலி இடங்கள் - 27
மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு பொறுத்து வயது வரம்பு, கல்வி தகுதி மாறுபடும். எனவே, பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், இந்த லிங்கில் https://rajyasabha.nic.in/rsnew/deputation_Advt_2022.pdf கல்வி தகுதியை தெரிந்துக்கொள்ளலாம்.
அப்ளை செய்யும் செயல்முறை
விண்ணப்பதாரர்கள் ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான rajyasabha.nic.in -க்கு சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவத்துடன் தேவையான ஆவணங்களை நிரப்பி "Director (Personnel), Room no 240, 2nd floor, Rajya Sabha Secretariat, Parliament of India, Parliament House Annexe, New Delhi- 110001" என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.
மே 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். உரிய தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பெறப்பட்ட எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil