ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்ட (Ex Serviceman Contributory Health scheme - ECHS) மருத்துவமனையில் மருத்துவர் முதல் உதவியாளர் வரையிலான பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 75,000
பல் மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BDS படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 75,000
நர்சிங் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: DGNM படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 28,100
மருந்தாளுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Pharm படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 28,100
பெண் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,800
ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,700
சுகாதார பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,800
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://echs.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: OIC, Station HQ, (ECHS Cell), INS Parundhu, Utchipuli, Ramanathapuram - 623534
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2024
மேலும் விவரங்களுக்கு https://echs.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“