Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அரசு கல்லூரியில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பி.காம். மற்றும் பி.சி.ஏ. பட்டப்படிப்புகள் வகுப்புகளை தொடங்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அரசு கல்லூரியில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பி.காம். மற்றும் பி.சி.ஏ. பட்டப்படிப்புகள் வகுப்புகளை தொடங்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில், (1).பி.காம்., விரிவுரையாளர்கள் (2 நபர்கள்) ரூ.20,000 ஊதியத்தில் M.Com., with Ph.D., or UGC-NET., SLET., or SET., or M.Phil., (2009) & RCI Approved Course-Senior Diploma in Teaching the Deaf (Hearing Impaird) (or) Special B.Ed., in teaching the Hearing Impariment கல்வித் தகுதியுடனும்,
(2) பி.சி.ஏ., விரிவுரையாளர்கள் (2 நபர்கள்) ரூ.20,000 ஊதியத்தில் M.C.A., with Ph.D., or UGC- NET., SLET., or SET., or M.Phil., (2009) & RCI Approved Course-Senior Diploma in Teaching the Deaf (Hearing Impaird) (or) Special B.Ed., in teaching the Hearing Impariment கல்வித் தகுதியுடனும்,
(3). தமிழ் விரிவுரையாளர் (1 நபர்) ரூ.20,000 ஊதியத்தில் M.A., with Ph.D., or UGC-NET., SLET., or SET., or M.Phil., (2009) & RCI Approved Course-Senior Diploma in Teaching the Deaf (Hearing Impaird) (or) Special B.Ed., in teaching the Hearing Impariment கல்வித் தகுதியுடனும்,
(4).கணினி பகுப்பு ஆய்வாளர் (1 நபர்) ரூ.6,000 ஊதியத்தில் B.Sc., Computer Science B.Sc., Maths or Physics or Statistics main, with Diploma in Computer Science கல்வித் தகுதியுடனும் உள்ள நபர்கள்
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் இதர கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, முன் அனுபவச்சான்று மற்றும் 3 புகைப்படங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் 16.03.2023 அன்று பிற்பகல் 6.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.