இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவுக் காவலர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.19,500 – 62,000
பதிவறை எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.15,700 – 50,000
இரவுக் காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.15,700 – 50,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/10/2023101294.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சிப் பிரிவு, முதல் தளம், இராமநாதபுரம் - 623504
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.11.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/10/2023101275.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“