Rameshwaram Ramanathaswamy temple recruitment apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இராமநாதபுரம் மாவட்டம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில், காலியாக உள்ள தட்டச்சர், காவலர், டிக்கெட் விற்பனையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.02.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தட்டச்சர் (Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
டிக்கெட் விற்பனையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 24
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 50,400
தூர்வை
காலியிடங்களின் எண்ணிக்கை : 20
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
துப்புரவு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
வயதுத் தகுதி : 01.02.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் - 623526, இராமநாதபுரம் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil