தமிழகத்தில், ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராணிப்பேட்டை பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 263 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Trade (ITI) Apprentices
மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 263
Fitter – 120
Welder – 62
Electrician – 34
Turner – 20
Machinist – 12
Motor Mechanic Vehicle - 3
Instrument Mechanic – 2
AC Mechanic – 4
Plumber – 3
Carpenter - 3
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: 7,700 – 8,050
வயது தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Executive/ HR, Establishment & Recruitment, Boiler Auxiliaries Plant, BHEL, Ranipet - 632406
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://bap.bhel.com/index.html என்ற இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“