தமிழகத்தில் லட்சக் கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்தில் வேலைவாய்ப்பு பதிவு சீனியாரிட்டி கடைபிடிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. பணியிடங்கள் கூட்டுறவுத்துறை மூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பணையாளர், கட்டுநர் பணியிடங்கள் கூட்டுறவுத்துறை மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பணியிடங்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. விற்பனையாளர் பணியிடத்துக்கு 10ம் வகுப்பு கல்வித் தகுதி, பணிக் காலத்தில் 9 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படுகிறது. அதே போல, கட்டுநர் பணிக்கு 8ம் வகுப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் விற்பணையாளர், கட்டுநர் பணி நேர்காணல் மூலம் கூட்டுறவுத்துறை மூலம் நிரப்பப்படும் என்றாலும், அது நடைமுறையில் ஆளும் கட்சிக்காரர்கள் பரிந்துரையின் பேரில்தான் நியமனம் செய்யப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமில்லாமல், ஆளும் தி.மு.க-வில் பலரும் கட்சிக் காரர்களுக்கு எந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தி.மு.கவினர் பலரும் அதிருப்தியில் இருந்த நேரத்தில் அவர்களை திருப்தி படுத்தும் விதமாக ரேஷன் கடைகள் பணியாளர்களை தி.மு.க ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர் பரிந்துரைகளின் பேரில் தேர்வு செய்யக் கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த பணியிடங்களுக்கு லட்சங்களில் ரேட் பேசி முடிவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 150-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஆளும் கட்சிக் காரர்கள் முந்திக்கொண்டு போட்டி போட்டு வருகின்றனர். ரேஷன் கடைகளில் ஆட்சேர்ப்பு நடைமுறை டிசம்பர் 14-28-க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், லட்சக் கணக்கான இளைஞர்கள் படித்துமுடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, வேலை இல்லாமல் காத்திருக்கிறார்கள். ஆனால், ரேஷன் கடைகளில் பணி நியமனங்கள் ஆளும் கட்சியின் பரிந்துரையின் பேரில் விற்கப்படுகிறது என்பது இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்தில், வேலைவாய்ப்பு பதிவு சீனியாரிட்டி கடைபிடிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், முறையாக தேர்வு நடத்தப்படவில்லை என்றால், சிலர் ரேஷன் கடை ஊழியர் நியமனத்தை தடுத்து நிறுத்த நீதிமன்றத்திற்கு செல்லவும் தயாரிக்க வருகின்றனர்.
இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சுமார் 168 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் சுமார் 135 விற்பனையாளர்கள் மற்றும் 33 பேக்கர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்போது ரேஷன் கடை ஆட்சேர்ப்பு குறித்து, விற்பனையாளர் மற்றும் பேக்கர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல் மூலம் தேர்வு நடத்தப்படும் என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.