Reserve Bank of India Announced 24 Vacancy for Civil & Electrical Engineer Posts: இரண்டு வருடம் முன் அனுபவம் உள்ள டிப்ளமோ என்ஜினியர்கள், இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) ஜூனியர் என்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் நிரப்பப்பட உள்ள 24 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 20-30க்குள் இருக்க வேண்டும். டிகிரியில் குறைந்தது 65% மதிப்பெண் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் PwD வகையினரைச் சேர்ந்தவர்களுக்கு 55% மதிப்பெண் இருந்தால் போதும்.
rbi.org.in. என்ற ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜனவரி 27
ஆன்லைன் தேர்வு மூலம் ரிசர்வ் வங்கி தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது. மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் நிரகாரிப்படுவார்கள். ஆங்கில மொழித் தேர்வு, இரண்டு என்ஜினியரிங் பாடம், பொது விழிப்புணர்வு தேர்வு என மொத்தம் நான்கு பேப்பர்கள் கொண்ட ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். மொத்த மதிப்பெண்கள் 300. தேர்வெழுத மொத்த கால நேரம் 150 நிமிடங்கள்.
இதர முழு விவரங்களையும் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.