Advertisment

ரிசர்வ் வங்கி வேலை வாய்ப்பு; 66 பணியிடங்கள்; டிகிரி, பி.இ, பி.டெக் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

ரிசர்வ் வங்கியில் 66 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
RBI

RBI

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா ஆலோசகர் மற்றும் துறைசார் நிபுணர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 66 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிங்க!

காலியிடங்களின் விவரம்

Data Analytics – 4

IT Security Administration – 10

IT System Administration – 8

IT Project Administration – 6

Mainframe System Administration / Virtualised Environment Administration/ Database Administration – 3

Expert in Dynamic Stochastic General Equilibrium (DSGE) Modelling – 1

Applied Mathematics – 1

Applied Econometrics – 2

Area of Theoretical Agent-Based Models (TABMs) / Heterogenous Agent New Keynesian (HANK) / Representative Agent New Keynesian (RANK) / Dynamic Stochastic General Equilibrium (DSGE) models – 2

Credit Risk Analytics – 2

Market Risk Analytics – 2

Liquidity Risk Analytics – 2

Stress Testing – 2

Forex and Trade Finance – 3

IT and Cyber Security Analytics – 8

Accounting Hub – 3

Integration between CBS and Govt. systems – 3

Taxation and Accounting Matters – 1

Bank Analyst – 1

Legal – 1

IT Systems & Digital Payments - 1

கல்வித் தகுதி: பொருளாதாரம் சார்ந்த பணியிடங்களுக்கு பொருளாதாரம்/ வணிகவியல்/ புள்ளியியல்/ டேட்டா சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஐ.டி சார்ந்த பணியிடங்களுக்கு பி.இ/ பி.டெக் படிப்பில் ஐ.டி/ கணினி அறிவியல் படித்திருக்க வேண்டும். சில பதவிகளை முதுகலை அல்லது பி.ஹெச்.டி முடித்திருக்க வேண்டும்.

சட்டம் சார்ந்த பணியிடங்களுக்கு எல்.எல்.பி படித்திருக்க வேண்டும். மேலும் பதவிகளைப் பொறுத்து 3 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 23 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

சி பிரிவு பதவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 36.96 லட்சம் – 45.84 லட்சம்

டி பிரிவு பதவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 51.60 லட்சம் – 57.24 லட்சம்

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.600 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100 ஆகவும் உள்ளது.

தேர்வு முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.rbi.org.in அல்லது https://ibpsonline.ibps.in/rbicsamay23/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.07.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4277 என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment