/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-25T203152.060.jpg)
aavin, recruitment, manager, driver, technical assiaitant, virudunagar, ஆவின், வேலைவாய்ப்பு, மேனேஜர், டிரைவர், விருதுநகர்
ஆவின் நிறுவனத்தின் விருதுநகர் கிளையில் காலியாக உள்ள மேனேஜர், டிரைவர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள் : 03
தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு -II : 01
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 'சி' உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
டிரைவர் : 01
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
மேனேஜர் : 01
கல்வித் தகுதி : Veterinary Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary Council-லில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரை
விண்ணப்பிக்கும் முறை : https://aavinmilk.com/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 16.08.2019
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
General Manager,
Virudhunagar District Co-operative Milk Producers, Union Limited,
Srivilliputtur
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.