ரூ.1.75 லட்சம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பியுங்க…மறந்துறாதீங்க…

Aavin recruitment : ஆவின் நிறுவனத்தின் விருதுநகர் கிளையில் காலியாக உள்ள மேனேஜர், டிரைவர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By: July 25, 2019, 8:37:29 PM

ஆவின் நிறுவனத்தின் விருதுநகர் கிளையில் காலியாக உள்ள மேனேஜர், டிரைவர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள் : 03

தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு -II : 01

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ‘சி’ உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை

டிரைவர் : 01

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை

மேனேஜர் : 01

கல்வித் தகுதி : Veterinary Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary Council-லில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரை

விண்ணப்பிக்கும் முறை : https://aavinmilk.com/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 16.08.2019

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

General Manager,
Virudhunagar District Co-operative Milk Producers, Union Limited,
Srivilliputtur

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Recruitment in aavin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X