மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., பி.எஸ்சி., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்....

Recruitment : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காலிப்பணியிடங்கள் : 38

பணி மற்றும் பணியிட விபரங்கள்

உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) – 01
பண்ணை மேலாளர் – 05
ஜூனியர் இஞ்ஜினியர் (மின்) – 01
சுருக்கெழுத்தாளர் – 04
இளம் உதவியாளர் – 08
டைப்பிஸ்ட்- 08
மீன்வள உதவியாளர் – 02
அலுவலக உதவியாளர் – 01
Seaman – 01
Iceman – 01
துப்புரவாளர் – 01
அருங்காட்சியக கண்காணிப்பாளர் – 01
தோட்ட பராமரிப்பாளர் – 01
ஓட்டுநர் – 03

வயது வரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 8 மற்றும் 10 ஆம் தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை முடித்தவர்கள், இஞ்ஜினியரிங் துறையில், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு – ரூ.1000
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – ரூ.500

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் “The Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam-611 002” என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The Registrar,
Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University,
Nagapattinam – 611 002

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 05.08.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய //tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20-%20non-teaching%20positions%20-%20advertisement.pdf என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

விண்ணப்ப படிவத்தினைப் பெற //tnjfu.ac.in/downloads/carrers/TNJFU-Non-teaching-staff-Application-terms-conditions-and-annexure.pdf எனும் இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close