இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) உதவி பொறியாளர்கள் (ஏ.இ) மற்றும் உதவி நிர்வாக அதிகாரி (ஏ.ஏ.ஓ) நிபுணர் பணிகளுக்கான விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தின் கீழ் மொத்தம் 218 பணிகள் நிரப்பப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 25ல் தொடங்கியது.
ஆர்வமுள்ள தேர்வ்கர்கள் licindia.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகுதி பெற, தேர்வர்கள் முதல்நிலை (ப்ரிலிம்ஸ்) மற்றும் முதன்மை (மெயின்) தேர்வுகளில் தேர்வாக வேண்டும்.
முதல்நிலத் தேர்வு ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதன்மை தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணலுக்கான பட்டியல் தயாரிக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
இறுதியாக தேர்டுக்கப்படும் தேர்வர்கள் ஒரு வருடம் தகுதிகாண் காலத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இது இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
LIC AE, AAO ஆட்சேர்ப்பு 2020 அறிவிப்பு: தகுதி
வயது: விண்ணப்பதாரர் பிப்ரவரி 1, 2020 நிலவரப்படி குறைந்தது 21 வயதாக இருக்க வேண்டும். உயர் வயது வரம்பு 30. இடஒதுக்கீடு பெரும் மாணவர்களின் உயர் வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: தேர்வர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஏ.ஏ.ஓ ராஜ்பாஷா பணிக்கும், முதுகலை பட்டப்படிப்பு கட்டாயமாகும்.



தேர்வு முறை : ப்ரிலிம்ஸ் தேர்வில் 100 மல்டிப்ல் சாய்ஸ் கேள்விகள் (MCQ கள்) இருக்கும்.
முதன்மை தேர்வில் 120 அப்ஜெக்டிவ் கேள்விகளும் (300 மதிப்பெண்கள் ) , 2 டிஸ்கிரிப்டிவ் (விளக்க) கேள்விகளும் (25 மதிப்பெண்கள் ) இருக்கும். இரண்டுமே ஆன்லைன் மூலம் தேர்வர்கள் எழுத வேண்டும்.
கட்டணம்: ஒவ்வொரு படிவத்திற்கும் ரூ .700 விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்.டி மற்றும் பி.டபிள்யூ.டி தேர்வர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. இருப்பினும், அவர்கள் ரூ .85 அறிவிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.
சம்பளம் : தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மருத்துவக் காப்பீடு, எல்.டி.சி, கிராச்சுட்டி போன்று கொடுக்கப்படுவதுடன் மாதத்திற்கு ரூ .57,000 சம்பளம் பெறுவார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"