scorecardresearch

TNEA news: தொடங்கியது பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு: ரெஜிஸ்டர் பிராசஸை தெரிஞ்சுக்கோங்க!

பொதுபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

TNEA news: தொடங்கியது பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு: ரெஜிஸ்டர் பிராசஸை தெரிஞ்சுக்கோங்க!

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இந்தாண்டு 1 லட்சத்து 39 ஆயிரத்து 973 நபர்களுக்கு தரவரிசை பட்டியில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான கலந்தாய்வைத் தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள், அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் நிறைவடைந்துவிட்டது. முதல்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டன.

இந்நிலையில், பொதுபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தரவரிசைப் பட்டியலில் எண் 1 முதல் 14,788 வரை உள்ளவர்களுக்கு வரும் அக்.5 வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. 14,789 முதல் 45,227 வரை உள்ளவர்களுக்கு அக்.1 முதல் அக்.9 வரையில் இரண்டாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. எண் 45,228 முதல் 86,228 வரை உள்ளவர்களுக்கு அக்.5 முதல் அக்.13 வரையில் மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, எண் 86,229 முதல் ஒரு லட்சத்து 36,973 வரை உள்ளவர்களுக்கு அக்.9 முதல் அக்.17 வரையில் 4-ஆவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

பொறியியல் கலந்தாய்வு 2021: ரெஜிஸ்டர் செய்யும் வழிமுறை

step 1: TNEA அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.

கேட்கப்படும் சான்றிதழை பதிவிட வேண்டும்

step 3: முன்பதிவு விவரங்கள், கல்வித் தகவல், உதவித்தொகை விவரம் மற்றும் இருக்கை ஒதுக்கீடு தேர்வு போன்றவற்றைப் படிவத்தில் நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும்.

step 4: ரெஜிஸ்டரேஷன் கட்டணம் செலுத்த வேண்டும்

step 5: அப்லிகேஷன் படிவத்தை செவ் செய்துவிட்டு, எதிர்கால தேவைக்குப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இந்தக் கல்வியாண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Register for tnea councelling 2021 application