Repco Bank Jobs: ரெப்கோ வங்கி கிளர்க் வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

வங்கி வேலை வேண்டுமா? ரெப்கோ வங்கியில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வங்கி வேலை வேண்டுமா? ரெப்கோ வங்கியில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Repco Bank Jobs: ரெப்கோ வங்கி கிளர்க் வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

ரெப்கோ வங்கியில் (Repco Bank) கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள், இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி ஜூனியர் அசிஸ்டெண்ட் அல்லது கிளர்க் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.11.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Junior Assistant/Clerk

Advertisment
Advertisements

காலியிடங்களின் எண்ணிக்கை : 50

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் : ரூ. 17,900 – 47,920

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாத் தேர்வாக 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language - 40), திறனறிதல் (Reasoning - 40), கணிதம் (Quantitative Aptitude – 40), பொது அறிவு (General Awareness / Banking - 40), கணினி அறிவு (Computer Awareness - 40) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான மொத்த கால அளவு மொத்தம் 2 மணி நேரம். 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibpsonline.ibps.in/rbjaoct22/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.900. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.500.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.repcobank.com/uploads/career/Final%20Advertisement%202022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: