ரெப்கோ வங்கியில் (Repco Bank) மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள், இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி மேனேஜர் மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.11.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant General Manager (Chartered Accountant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் Associate of the Institute of Chartered Accountants முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2023 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 17 லட்சம்
Manager (Chartered Accountant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் Associate of the Institute of Chartered Accountants முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2023 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 13 லட்சம்
Assistant General Manager (Credit Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் CAIIB/MBA (Finance)/ CMA/CA/CFA/CS முடித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2023 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 17 லட்சம்
Manager (Credit Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் CAIIB/MBA (Finance) முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2023 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 13 லட்சம்
Assistant Manager IT (Software)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.TECH / MSc. in Computer Science or Information Technology / M.C.A படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2023 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்
Assistant Manager (legal)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate in Law படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2023 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்
வயது வரம்பு தளர்வு; மத்திய அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://repcobank.com/uploads/career/Application-specialist%20officer.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2023
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://repcobank.com/uploads/career/notification%20-%20specialist%20officer.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“