/tamil-ie/media/media_files/uploads/2019/09/rbi.jpg)
reserve bank of india, recruitment, rbi recruitment, b grade officers, recruitment in rbi, bank officer recruitment, இந்திய ரிசர்வ் வங்கி, வேலைவாய்ப்பு, பி கிரேடு அதிகாரி, வங்கி அதிகாரி தேர்வு
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பி கிரேடு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த பட்டதாரி விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..இதில், பொதுப் பிரிவு, DEPR, DSIM என மொத்தம் மூன்று பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிடங்கள் - 199
பொருளாதார கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான துறை (DEPR) - 20 பணியிடங்கள்
புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை (DSIM) - 23 பணியிடங்கள்
பொதுப்பிரிவு - 156 பணியிடங்கள்
கல்வித்தகுதி
பொதுப்பிரிவு - 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு
எஸ்சி மற்றும் எஸ்டி - 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு
DEPR, DSIM - துறை சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்
வயது வரம்பு
பட்டதாரிகள் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
எம்.பில் படிப்பு முடித்தவர்கள் 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
பி.எச்டி முடித்தவர்கள் எனில் 34 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை
எழுத்துத்தேர்வு மூன்று தாள்களாக நடத்தப்படும்.
தேர்வு மையங்கள்
சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி
விண்ணப்ப கட்டணம்
எஸ்சி மற்றும் எஸ்சி பிரிவினர் - ரூ.100
இதர பிரிவினர் - ரூ.850
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 21 செப்டம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11 அக்டோபர் 2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 11 அக்டோபர் 2019
ஜெனரல்/ DEPR/ DSIM துறைக்கான தாள் 1 தேர்வு நடைபெறும் நாள் : 9 நவம்பர் 2019
ஜெனரல் துறைக்கு மட்டுமான தாள் 2 தேர்வு தேதி : 1 டிசம்பர் 2019
DEPR/DSIM துறைக்கான தாள் 2 தேர்வு நடைபெறும் நாள் : 2 டிசம்பர் 2019
பணியிடம் குறித்த அறிவிப்பு : https:பணியிடம் குறித்த அறிவிப்பு
தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.rbi.org.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.